Monday, March 21, 2011

telonews.com இணைப்புச் செய்திகள் !!

லிபியா மீது ஐந்து நாடுகள் குண்டு மழை

Monday, March 21st, 2011 at 13:29 (SLT)
அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன. இதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் வெனிசுலா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவை எதிர்த்து மிக நீண்ட போரை, தான் துவக்கி விட்டதாக, லிபிய தலைவர் மும்மர் கடாபி ஆவேசமாக அறிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் இன்று

Monday, March 21st, 2011 at 13:21 (SLT)
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய தலைவர்களை தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க >>>

இலங்கையில் தேர்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் பதினாறு வன்முறைகள்

Monday, March 21st, 2011 at 13:17 (SLT)
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் 16 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரிடையே இடம்பெற்றுள்ளன என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே’ தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற்ற இவ்வன்முறைச் சம்பவங்களில் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அடங்குவதுடன் 7 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் “கபே’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>

எம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் : கர்னல் கடஃபி

Monday, March 21st, 2011 at 0:01 (SLT)
லிபியா மீது மேற்கத்தைய நாடுகள் நடத்தியுள்ள தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் என விமர்சித்துள்ள லிபிய தலைவர் கர்னல் கடஃபி, இந்த தீவிரவாத தாக்குதல்களை தாங்கள் முறியடிப்போம் என கூறியுள்ளார். அரச தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையில், லிபிய மக்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருப்பதாகவும், லிபியாவின் எண்ணெய் வளத்தை மேற்கத்தையர்கள் அபகரிப்பதை தடுக்க தாங்கள் நீண்ட போர் ஒன்றை புரிய தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் வாசிக்க >>>

அமெரிக்க, பிரித்தானிய விமானங்கள் லிபியா மீது தாக்குதல் நடத்துகின்றன

Sunday, March 20th, 2011 at 12:57 (SLT)
அமெரிக்க, பிரித்தானிய விமானங்கள் லிபிய நிலைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபின் துருப்பினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் 110 ஏவுகணைகளை லிபிய நிலைகள் மீது தாக்கியதாக பென்டன் அறிவித்துள்ளது. மேலும் பிரெஞ்சு விமானங்கள் லிபிய மீது விமானத் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் வாசிக்க >>>

குடாநாட்டு மக்கள் இப்போது தான் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்

Sunday, March 20th, 2011 at 12:48 (SLT)
கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் குடாநாட்டு மக்கள் இப்போது தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்துள்ளார். 513 ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று மானிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் படையினர் ஒன்று கூடல் நிகழ்வின் போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்தார். மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்கள் கூட்டமைப்பு வழங்கிய ஆணைக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sunday, March 20th, 2011 at 12:39 (SLT)
சிங்கள மக்கள் வழங்கிய ஆணைக்கு அரசாங்கம் எவ்வளவு மதிப்பளிக்கின்றதோ அதேபோன்று தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ள ஆணையை அரசாங்கம் மதித்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்தார்கள். நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையை நாம் மதித்துணர்ந்து அவர்களுக்கான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் வாசிக்க >>>

‘ஃபுக்குஷிமா குளிரூட்டல்’ - வெற்றி அறிகுறி

Sunday, March 20th, 2011 at 0:01 (SLT)
ஐப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஃபுக்குஷிமா அணு மின்நிலையத்தின் குளிரூட்டல் கட்டமைப்புக்கான மின் விநியோக முயற்சி வெற்றியளித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமைக்குள் ஃபுக்குஷிமா மின் நிலையத்தின் ஆறு உலைகளில் நான்கு உலைகளுக்கான மின் கம்பிகளை பொருத்தி முடிக்க முடியுமென பணியாளர்கள் நம்புகின்றனர். மேலும் வாசிக்க >>>

வடக்கில் தமிழர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன நாம் தமிழர்களுடன் இருக்கின்றோம் காங்கிரஸ் கட்சித் தலைவி : சோனியா காந்தி

Saturday, March 19th, 2011 at 13:39 (SLT)
இலங்கைத் தமிழர் பிரச்சினைக் குறித்து தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 14 பொதுநலவாய நாடுகளின் விரிவுரையில் கலந்து கொண்டிருந்த போது உலகத் தமிழர் ஒன்றியம் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக மக்கள் மிகப்பெரிய வெற்றியை வழங்கியுள்ளனர்: டலஸ்

Saturday, March 19th, 2011 at 13:30 (SLT)
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த தேர்தலின் மூலம் நாட்டு மக்கள் ஜனாதிபதி மீதான பாரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஆளும் கட்சி பெற்றுக்கொண்டுள்ள வெற்றி தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் வாசிக்க >>>

சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வடக்கு கிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர் : சுரேஸ்

Saturday, March 19th, 2011 at 13:29 (SLT)
சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வடக்கு கிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது கட்சியை ஆதரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாசிக்க >>>

சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மையில் இன்று நெருங்கி வருகிறது

Saturday, March 19th, 2011 at 13:25 (SLT)
கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடவையாக சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மையில் இன்று சனிக்கிழமை நெருங்கி வருகிறது. “சுப்பர் மூன்’ எனப்படும் இந்த அபூர்வ நிகழ்வு இன்று சர்வதேச நேரப்படி 19: 10 மணிக்கு இடம்பெறுகிறது. சூரியன் மறைந்ததையடுத்து கிழக்கு பகுதியில் தோன்றும் இந்த சந்திரன் வழமையான சந்திரனை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் பிரகாசமானதாகவும் தோன்றும்.சந்திரன் தனது நீள் வட்டப் பாதையில் பயணிக்கையில் பூமியிலிருந்து வெவ்வேறு தூரங்களில் அதன் ஸ்தானம் அமைவதால் அது வேறுபட்ட அளவுகளில் பூமியிலுள்ளவர்களுக்கு தோன்றி வருகின்றது. மேலும் வாசிக்க >>>

ஆளுந்தரப்புக்குப் பாரிய வெற்றி 205, இலங்கைத் தமிழரசுக் கட்சி-12, ஐ.தே.க-09, முஸ்லிம் காங்கிரஸ் - 03

Friday, March 18th, 2011 at 13:39 (SLT)
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 205 ஆசனங்களை கைப்பற்றி முதலாவது இடத்திலும், இலங்கை தமிழரசு கட்சி 12 ஆசனங்களை கைப்பற்றி இராண்டாவது இடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றி 3ஆவது இடத்தைலும் உள்ளன. மேலும் வாசிக்க >>>

இதுவரை வெளிவந்த 97 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் முழுமையான விபரம்

Friday, March 18th, 2011 at 13:33 (SLT)
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 235 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 207 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இலங்கையில் உள்ள 335 உள்ளுராட்சி சபைகளில்  நேற்றைய தினம் 235 உள்ளுராட்சி சபைகளுக்கு மாத்திரமே தேர்தல் நடத்தப்பட்டது, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி அரசாங்கம் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகர சபைகள் உட்பட பல உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை ஒத்திவைத்தது. மேலும் வாசிக்க >>>

உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தகவல்

Friday, March 18th, 2011 at 13:23 (SLT)
உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு ‘ சோஹல்’ பெயரிடப்பட்டுள்ளது. ஆளில்லாமல் இயங்கக்கூடிய இப்பறக்கும் தட்டானது உளவு பார்த்தல் போன்ற பல தேவைகளுக்காக உபயோகிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இப் பறக்கும் தட்டானது உருவத்தில் சிறியதெனவும், குறைந்த சத்தத்தையே எழுப்பக்கூடியது என்பதுடன், இலகுவாக பயணிக்கக்கூடியது போன்றவை இதன் நன்மைகள் எனவும் ஈரானிய செய்திகள் குறிப்பிடுகின்றது. மேலும் வாசிக்க >>>

No comments:

Post a Comment