உறுப்பினர் ஒருவர் முஸ்ஸீமாக இருந்தால் அவர் முறைப்படி கலிமா சொல்லி சுன்னத்து செய்து தொடர்ந்து பர்லுகளையும் சுன்னத்துகளையும் நிறைவேற்றும் ஒரு தொழுகையாளியாக இருக்க வேண்டும்.
அல்லது அவர் ஒரு கிறீஸ்தவராக இருந்தால் முறைப்படி ஞானஸ்ணானம், முதல் நன்மை, சப்பிரசாதம், ஜெபம் என்று ஒரு பிரார்த்தனையாளனாக இருக்கவேண்டும்.
அல்லது அவர் ஒரு இந்துவாக இருந்தால் தீட்சை பெற்று அதற்குரிய ஆச்சார அனுஸ்டானங்களுக்கு அமைவான சமயியாக இருக்கவேண்டும்.
அல்லது யோகாசன அடிப்படையிலான ஒரு தியானியாக இருக்க வேண்டும். ஆக தான் விரும்பும் ஏதாவது ஒரு ஆன்மீக நல் ஒழுக்கப் பிரிவில் இணைந்துகொள்ள வேண்டும்.
ஆனால் இதில் எந்த அடிப்படையாய் இருந்தாலும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத சாதித்திய மூடநம்பிக்கைகள் களையப்பட்டு அதன் மூலம் தமிழ்ப்பண்பாடும் பாரம்பரியமும் கலந்த பொருளாதார பலமுள்ள உலக தமிழர் ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்ப உறுப்பினர் நிர்ப்பந்திக்கப்படுவார்.
No comments:
Post a Comment