Friday, June 3, 2011

மக்கட்பேறு






  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளில் தலை சிறந்தது நல்லறிவுடைய மக்களைப் பொறுவதாகும் !
 
எழுபிறப்பும் தீயனை தீண்டா பழியிறங்காய் பண்புடை மக்கட் பெறின் !


பழி இல்லாத நற்பண்புடைய மக்களை ஒருவன் பெற்றிருந்தால் அவனை ஏழு பிறவிகளிலும் துன்பங்கள் தீண்டாது !





 
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம் தம் வினையான் வரும் !


தம் மக்களே நம்முடைய பொருட்கள் எனபர். மக்களாகிய அவர் தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும் !






  குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் !


தம் குழந்தைகளின் மழலைச்சொற்களைக் கேட்டு இன்புறாத குழல் ஓசையும், வீணை இசையும் இனியது என்பர்.


 



  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது !

தம்மை விடத்தம் மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வது உலகத்து மக்கட் சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்து மகிழ்விப்பதாகும்.


 



  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் !

தன் மகன் நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்வதைக் கேட்டதால் அவனைப் பெற்ற காலத்து எய்திய மகிழ்ச்சியை விடப் பெரியதாகும்.


 



  மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல் !

மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாவது இவனைப்பெற  இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லே ஆகும்.





  தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் !

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செயதலாகும் !

 
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் !


தம் குழந்தைகளின் சிறு தளிர்க்கைகளால் பிசைந்த உணவானது பெற்றோர்க்கு அமுதத்தை விட மிக இனிமை தருவதாகும் !





  
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் !


தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செயதலாகும் !

No comments:

Post a Comment